சேப்பாக்கத்தில் ரிஷப் பண்ட் சதம்: அதிரடியாக தகர்க்கப்பட்ட தோனியின் சாதனை!
வேகமாக விளையாடிய பண்ட், அடுத்த அரைசதத்தை வெறும் 36 பந்துகளில் அடித்து, மைதானத்தில் கோலாகலத்தை ஏற்படுத்தினார்.
சென்னை: இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசம் அணிக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடி சதம் அடித்து, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பராக இருந்த எம்.எஸ். தோனியின் சாதனையை சமன் செய்தார்.
ரிஷப் பண்ட் 124 பந்துகளில் 109 ரன்களை விளாசி 6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 632 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய பண்ட், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் அரைசதத்தை 88 பந்துகளில் அடித்தார்.
அதற்குப்பின் வேகமாக விளையாடிய பண்ட், அடுத்த அரைசதத்தை வெறும் 36 பந்துகளில் அடித்து, மைதானத்தில் கோலாகலத்தை ஏற்படுத்தினார்.
சதம் அடித்து அதிரடி காட்டிய சுப்மன் கில்... கலங்கிப் போன வங்கதேசம்
இந்த சாதனையுடன், 144 இன்னிங்ஸ்களில் 6 சதங்களை பதிவு செய்த தோனியின் சாதனையை பண்ட் 58 இன்னிங்ஸ்களில் சுலபமாக சமன் செய்தார். இதனால், பண்ட்-க்கு ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.