மைதானத்திலேயே படுத்த ரோஹித்... கன்னத்தை பிடித்த மனைவி.. நெகிழ்ச்சி சம்பவம்!
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் வெற்றிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா உணர்ச்சிவசப்பட்டதுடன், மைதானத்திலேயே படுத்து விட்டார்.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் வெற்றிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா உணர்ச்சிவசப்பட்டதுடன், மைதானத்திலேயே படுத்து விட்டார்.
அவரது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை பெற்ற உணர்ச்சிப் பெருக்கில் இருந்தார்.
ஆடுகளத்தை விட்டு வெளியே சென்ற ரோஹித் சர்மா. நேராக தனது மனைவி மற்றும் குழந்தை அருகே சென்றார். அவரது மனைவி ரித்திகா அவரது கன்னத்தை பிடித்து, அணைத்து கண்ணீர் மல்க அவரை வாழ்த்தினார்.
2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்வியால் ரோஹித் சர்மா மிகவும் துவண்டு போயிருந்தார். அந்த சம்பவம் நடந்து எட்டு மாதங்களில் அடுத்த உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.
தனது கடைசி சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்கு உலகக் கோப்பை பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமையுடன் விடை பெறுவதால் ரோஹித் சர்மா உணர்ச்சி பெருக்கில் இருந்தார்.
பின்னர் அவர் தொடர்ந்து ஆதரவு அளித்த ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினார்.
இறுதிப் போட்டியை காண வந்திருந்த ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறிய அந்த காட்சி ரசிகர்களை நெகிழ வைத்தது.
விராட் கோலிஉலகக்கோப்பை வெற்றிக்கு பின் அவர் தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினார்.