வாய் திறக்காத ரோஹித்... மனைவி செய்த காரியம்... சிஎஸ்கேவுக்கு ஆதரவு.. செம ட்விஸ்ட்! 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதுடன், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

வாய் திறக்காத ரோஹித்... மனைவி செய்த காரியம்... சிஎஸ்கேவுக்கு ஆதரவு.. செம ட்விஸ்ட்! 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதுடன், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

அது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ள நிலையில்,  யாருமே எதிர்பாராத திருப்பமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிவுக்கு "மஞ்சள்" நிறத்தில் லைக் போட்டு அதிர விட்டுள்ளார் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே.

ரோஹித் சர்மா பதவி நீக்கம் குறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட ஒரு வீடியோ பதிவை ரித்திகா சஜ்தே, லைக் செய்து இருக்கிறார். அது மறைமுகமாக ரோஹித் சர்மா ரசிகர்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தூண்டி விட்டுள்ளது.

கேப்டனை மாற்றிய நிர்வாகம்.. மும்பை அணியில் அதிரடி மாற்றம்.. ஷாக்கில் ரோகித் ரசிகர்கள்!


 
ரோஹித் சர்மாவை வலுக்கட்டாயமாக மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது தான் அதற்கு முக்கிய காரணம்.

குஜராத் அணியில் இருந்து, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்கிய போதே ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு பாண்டியாவை கேப்டனாக மும்பை அணி நியமிக்கப் போகிறது என்ற சலசலப்பு எழுந்தது. 

அது உண்மையான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் அந்த முடிவை ஏற்கவில்லை. பலரும் சமூக ஊடகங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை பின் தொடர்வதை நிறுத்தி வருகின்றனர். 

இதனிடையே ரோஹித் சர்மா இதுவரை தன் கேப்டன் பதவி நீக்கப்பட்டது குறித்தும் மற்றும் ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 

அது மும்பை அணியுடன் ரோஹித் சர்மா சுமூக உறவில் இல்லை என்பதை வெளிக்காட்டுவதாக இருந்தது. இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோஹித் சர்மா பதவி நீக்கம் குறித்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவை லைக் செய்து இருக்கிறார். 

சாதாரணமாக லைக் பதிவு சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், சிஎஸ்கே அணி ரசிகர்கள் மஞ்சள் நிறத்தில் உள்ள லைக் ஈமோஜியை தான் பயன்படுத்தி லைக் பதிவுகளை இடுவார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா, மஞ்சள் நிற லைக் பதிவை இட்டு, சிஎஸ்கே அணி பக்கம் ரோஹித் சர்மா சாய்வதை போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp