கேப்டன் பதவிக்கு மோதல்.. ரோகித், ஹர்திக்குக்கு தோனி சொன்ன அறிவுரை!
ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறும் வகையில் தோனி ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கின்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்பதவிக்கு ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தோனி தற்போது ஒரு அறிவுரை சொல்லி இருக்கின்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நீண்ட காலம் இருந்து வரும் நிலையில், இடையில் ஜடேஜாவும் தமக்கு கேப்டன் பதவி வேண்டும் என கூறியதால் அவருக்கு விட்டுக் கொடுத்த தோனி, பின்னர் அவர் சரியாக செயல்படாததால் மீண்டும் கேப்டனாக வந்தார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறும் வகையில் தோனி ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கின்றார்.
தலைமை பதவியில் இருப்பவர்கள், மரியாதையை சம்பாதிப்பது மிகவும் முக்கியம் என்றும், மரியாதை என்பது நமது பதவிக்காக வரும் விஷயமல்ல என்றும் நமது செயல்பாடுகளால் மட்டுமே அது கிடைக்கும் என்று தோனி குறிப்பிட்டு உள்ளார்.
கேப்டன் பதவிதான் கெத்து என்று தற்போதைய இளம் வீரர்கள் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், களத்தில் எப்படி நடந்து கொள்கின்றோம், அணிக்காக எவ்வாறு விளையாடுகின்றோம் என்பதால் மட்டுமே மரியாதை வரும் என்று கூறியிருக்கிறார்.
தோனியின் இந்த அறிவுரையை பார்த்தாவது இனிவரும் கிரிக்கெட் வீரர்கள் கேப்டன் பதவிக்காக அடித்துக் கொள்ளாமல் சுயநலம் இன்றி இருக்க வேண்டும் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.