கோலி - ரோஹித் இருவரில் மிகப்பெரிய பணக்காரர் யார் தெரியுமா? இந்திய அணியின் கோடீஸ்வர வீரர்கள் இவர்களா!
ஐபிஎல், விளம்பரம் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றார்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நான்கு வீரர்கள் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர்.
அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனதுடன், ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்கள் ஆவர்.
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 127 மில்லியன் டாலர் ஆகும்.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1046 கோடியாகும். அவரது ஆண்டு வருமானம் சுமார் 15 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விராட் கோலியைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு 214 கோடி ரூபாயாக உள்ளது. மும்பையில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு மடும் 30 கோடி இருக்கும்.
மேலும் அவர் ஐபிஎல், விளம்பரம் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றார்.
இதேவேளை, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் ரூ.100 கோடி சொத்து மதிப்பு கொண்ட வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.
ரவீந்திர ஜடேஜாவின் சொத்து மதிப்பு 120 கோடி ரூபாய் ஆகும். விளம்பரம் மூலமே இவர் நிறைய சம்பாதிக்கிறார்.
பந்த்தின் சொத்து மதிப்பு சுமார் 12 மில்லியன் டாலர்கள் அதாவது 100 கோடி ரூபாய் ஆகும். இவரும் பல விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார்.
ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு சுமார் 91 கோடி ரூபாய் ஆகும். பாண்டியாவும் விளம்பரத்தில் அதிகம் சம்பாதிக்கிறார். சஞ்சு சாம்சனின் சொத்து மதிப்பு சுமார் 10 மில்லியன் டாலர்கள் அதாவது 82 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.
முகமது சிராஜ் 57 கோடிக்கு சொந்தக்காரர். ஜஸ்பிரித் பும்ராவின் மொத்த சொத்து மதிப்பு 55 கோடிக்கு மேல் உள்ளது. அக்சர் படேலின் சொத்து மதிப்பு 49 கோடியாகும்.
யுஸ்வேந்திர சாஹலின் சொத்து மதிப்பு 45 கோடி. அதேபோல, சுப்மன் கில்லின் சொத்து மதிப்பு 34 கோடி ரூபாய். சூர்யகுமார் யாதவின் சொத்து மதிப்பு 32 கோடியாக உள்ளது.