38 வயதில் ரோஹித் சர்மா செய்த வேலை... மூக்கில் விரலை வைக்கும் ரசிகர்கள்
ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்கள் குவித்ததுடன், ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது ரோஹித் சர்மாவின் 25வது ஆட்டநாயகன் விருதாகும்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக சதம் விளாசிய நிலையில், 38 வயதைக் கடந்துள்ள ரோஹித் சர்மா செய்து உள்ள சாதனைகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்கள் குவித்ததுடன், ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது ரோஹித் சர்மாவின் 25வது ஆட்டநாயகன் விருதாகும்.
ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் 25வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று உள்ளதுடன், இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்றவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து உள்ளார்.
அத்துடன், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக விளையாடிய போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 55.35 என்பதாகவும், ஸ்ட்ரைக் ரேட் 113.08 என்பதாகவும் உள்ளது.
கடந்த 15 ஒருநாள் போட்டி இன்னிங்ஸ்களில் மட்டும் ரோஹித் சர்மா இரண்டு சதங்களும், மூன்று அரை சதங்களும், நான்கு 40+ ரன்களும் அடித்து உள்ளார்.
119(90)
2(7)
35(20)
64(44)
58(47)
47(31)
47(29)
61(54)
40(24)
4(2)
87(101)
46(40)
48(40)
86(63)
131(84).