நான் தவறு செய்து விட்டேன்... ஏற்றுக்கொள்ள முடியவில்லை - ரோகித் சோகம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்தமைக்கு இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ததே தவறு என்று கூறப்படுகின்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்தமைக்கு இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ததே தவறு என்று கூறப்படுகின்றது.
ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்த நிலையில் வானமும் மேகமூட்டமாக இருப்பதால், ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா, ஆடுகளத்தில் புற்கள் பெரிய அளவில் இல்லை என்பதால், பந்து கொஞ்ச நேரம் ஸ்விங்க ஆகும். அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நினைத்ததாக கூறியுள்ளார்.
அத்துடன், சொந்த மண்ணில் விளையாடும்போது முதல் செஷன் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர்கள் போட்டிக்குள் வந்து விடுவார்கள். இதன் காரணமாகத்தான் குல்தீப் யாதவை நாங்கள் இன்று போட்டியில் சேர்த்தோம்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் கூட குல்தீப் யாதவால் விக்கெட் எடுக்க முடியும். நாங்கள் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆடுகளம் குறித்து நான் சரியாக கணிக்காமல் தவறிவிட்டேன்.
இதன் காரணமாக தான் மோசமான நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இது என்னுடைய தவறுதான். வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்தது உண்மை அதற்காக 46 ரன்களில் ஆட்டம் இருந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது போன்ற ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு திட்டம் இருக்கும். ஆனால் இன்று எந்த பேட்ஸ்மேன்களும் தங்களுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்த தவறி விட்டார்கள்.
எங்களுக்கு இது மோசமான நாளாக அமைந்து விட்டதுடன், எங்களுக்கு மிகப்பெரிய சவால்கள் இருக்கின்றது.அதை நாங்கள் எப்படி எதிர்கொள்வோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ரோகித் சர்மா குறிப்பிட்டு உள்ளார்.