இந்திய கேப்டன்களில் டாப்.. தோனியின் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா 

ரோகித் சர்மா 53 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இந்திய கேப்டன்களில் டாப்.. தோனியின் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா 

14 மாதங்களுக்குப் பிறகு கேப்டனாக டி20 அணியில் ரோகித் சர்மா திரும்பி உள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்த தொடரை வென்றதன் மூலம் ரோகித் சர்மா கேப்டனாக புதிய சாதனையை படைத்து உள்ளார். அதாவது, சர்வதேச டி 20 போட்டிகளில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தில் உள்ளார்.

ரோகித் சர்மா 53 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளதுடன், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தோனி இருக்கிறார். 

72 போட்டிகளில் டி20 அணியின் கேப்டனாக இருந்து 41 போட்டிகளில்  தோனி வென்றிருக்கிறார். மூன்றாவது இடத்தில் உள்ள விராட் கோலி 50 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 30 போட்டிகளில் வெற்றியை பெற்றிருக்கிறார்.

2ஆவது போட்டியிலும் டக் அவுட்... ரோகித் சர்மா மோசமான சாதனை... கடுப்பான ரசிகர்கள்!

நான்காவது இடத்தில் உள்ள ஹர்திக் பாண்டியா 16 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றியை பெற்றிருக்கிறார். 

கேப்டனாக ரோகித் சர்மா சாதனையை படைத்தாலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா வைத்து இருக்கிறார்.

டி20 கிரிக்கெட் வரலாற்றிலே அதிக டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிரிங் முதலிடத்திலும் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp