ஒரே வருடத்தில் 10 தடவை... மோசமான சாதனையை படைத்த ரோஹித் சர்மா!
கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரே வருடத்தில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரே வருடத்தில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியதுடன், ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் இருவரும் ரன்களை சேர்க்க தடுமாறினர்.
டிம் சவுதி மற்றும் ஹென்ரி இருவரும் பவுலிங்கில் மிரட்டலாக செயல்பட்ட நிலையில், ரோஹித் சர்மா எவ்வளவோ முயன்ற போதும், பவுண்டரியை அடிக்க முடியவில்லை. அத்துடன், கேப்டன் ரோஹித் சர்மா 16 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆடுகளம் சூழல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் போது, பேட்ஸ்மேன்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலையில், ரோஹித் சர்மா அவசரப்பட்டு விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
ஏற்கெனவே வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 இன்னிங்ஸில் விளையாடி 42 ரன்களை மட்டுமே ரோஹித் சர்மா சேர்த்திருந்தார். இதனால் ரோஹித் சர்மா தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளதுடன், நடப்பாண்டில் மட்டும் 10வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் அணியில் விளையாடி வரும் வீரர்களில், இவ்வளவு இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்திருப்பது ரோஹித் சர்மா தான் என்பதுடன், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் ஃபார்மை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.