6 ரன்களுக்குள் ரோகித் சர்மாவை தட்டிதூக்கிய வங்கதேசம்.. இந்தியாவுக்கு சவால்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 6 ரன்கள் எடுத்ததிலேயே அவுட்டாகி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

6 ரன்களுக்குள் ரோகித் சர்மாவை தட்டிதூக்கிய வங்கதேசம்.. இந்தியாவுக்கு சவால்

சென்னை: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 6 ரன்கள் எடுத்ததிலேயே அவுட்டாகி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 42 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம், சென்னை வானிலை மற்றும் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பந்து வீச்சை அதிகப்படியான வாய்ப்பாக கருதியது.

வங்கதேச அணியின் தொடக்க பந்து வீச்சாளர்கள் ரோகித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சவாலாகச் செயல்பட்டனர். குறிப்பாக, 5.1 வது ஓவரில் வங்கதேச பவுலர் ஹசன் அஹமத் வீசிய பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா, ஸ்லீப்பில் நின்றிருந்த வீரருக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். 19 பந்துகளை சந்தித்த ரோகித், வெறும் 6 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

இந்த அவுட்டால் இந்திய அணி 14 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. இந்திய அணி அதிகப்படியான ரன்களை குவித்தால்தான் இந்த டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதால், குறைந்தது 300 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுப்பது மிக முக்கியம்.

இந்த ஆட்டத்தில் வங்கதேச பவுலர்கள் தங்கள் திறமையை நிரூபித்து, இந்தியாவுக்கு தொடக்கத்தில் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp