பிட்ச் மண்ணை சாப்பிட்ட ரோகித் சர்மா... ஏன் தெரியுமா? இப்படி ஒரு பின்னணியா!
இறுதிப் போட்டிக்கு பின் ஆடுகளத்தில் இருந்த புற்களை எடுத்து ரோகித் சர்மா ஏன் தின்றார் என்று பலருக்கும் தெரியவில்லை.
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களும் பல்வேறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த வெற்றியால் வரலாற்றில் இடம் பிடித்த ரோகித் சர்மா ஆடுகளத்தில் இருந்த மண்ணை எடுத்து தின்றார்.
முன்னதாக, ஸ்லோ மோஷனில் நடந்து வந்து கோப்பையை வாங்கினார் ரோகித் சர்மா. இதனை பார்த்த ரசிகர்கள், கால்பந்து வீரர் மெஸ்ஸி உலக கோப்பையை வென்ற போது இப்படிதான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் என்றும் பிரபல மல்யுத்த வீரர் இவ்வாறு தான் நடந்து வருவார் என்றும் கூறினர்.
ஆனால், இறுதிப் போட்டிக்கு பின் ஆடுகளத்தில் இருந்த புற்களை எடுத்து ரோகித் சர்மா ஏன் தின்றார் என்று பலருக்கும் தெரியவில்லை.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரோகித் சர்மா, வெற்றியின் மிதப்பில் இருந்தபோது நான் நேரடியாக ஆடுகளத்திற்கு சென்றேன்.
ஏனென்றால் இந்த வெற்றியை இந்த ஆடுகளம் தான் எங்களுக்கு வழங்கியது. இந்த ஆடுகளத்தில் விளையாடி தான் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறோம்.
எனவே இந்த பார்படாஸ் மைதானத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன். இந்த ஆடுகளம் எனக்குள் இருக்க வேண்டும். என்னுள் கலக்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு செய்தேன்.
என்னுடைய ஒட்டுமொத்த கனவும் பார்படாஸ் மண்ணில் தான் நிஜமாகி இருக்கிறது. இதனால் தான் அதனை நான் எடுத்து சாப்பிட்டேன் என்று ரோகித் சர்மா கூறினார்.
இந்த கொண்டாட்டத்தை முதலில் தொடங்கியவர் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் தான். விம்பிள்டன் பட்டத்தை வென்ற போது அவர் ஆடுகளத்தில் இருந்த புல்லை எடுத்து தின்றார். இதனை தான் தற்போது ரோகித் சர்மா செய்திருக்கிறார்.