இன்னும் ஒரே ஒரு சதம்தான் வேணும்... டிராவிட் சாதனையை முறியடிப்பாரா ரோகித் சர்மா?

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் 80 சதங்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இன்னும் ஒரே ஒரு சதம்தான் வேணும்... டிராவிட் சாதனையை முறியடிப்பாரா ரோகித் சர்மா?

நியூசிலாந்து அணிக்கு எதிராக புனேவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், ராகுல் டிராவிட்டை முந்த வாய்ப்பு இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் 80 சதங்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த நிலையில், தலா 48 சதங்களுடன் ரோகித் சர்மாவும் ராகுல் டிராவிட்டும்  மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், ரோகித் சர்மா சதம் அடித்தால் டிராவிடை முந்தி விடுவார்.

இதேபோன்று தலா 38 சதங்கள் அடித்து ஷேவாக் மற்றும் கங்குலி ஆகியோர் நான்காவது இடத்தில் உள்ளதுடன்,  35 சதங்களுடன் ஐந்தாவது இடத்தில் கவாஸ்கர் இருக்கிறார். 

ரோகித் சர்மா இன்னும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் இந்த வருடத்தில் விளையாட இருக்கிறார். இதில் ரோகித் சர்மா குறைந்தபட்சம் இரண்டு சதங்கள் அடித்தால் கூட சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று விடுவார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 12 சதமும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 31 சதமும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐந்து சதமும் ரோகித் சர்மா விளாசியிருக்கின்றார்.

கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார். அதன் பிறகு 6 இன்னிங்ஸில் அவர் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோரே 52 ரன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...