ரோகித் - டிராவிட் கூட்டணி இனி வேண்டாம்... மீண்டும் அதே தப்ப செய்யாதீங்க.. ரசிகர்கள் கொந்தளிப்பு!

அண்மைய காலமாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் திட்டமிடலில் மோசமாக செயல்பட்டு வருகின்றனர்.

ரோகித் - டிராவிட் கூட்டணி இனி வேண்டாம்... மீண்டும் அதே தப்ப செய்யாதீங்க.. ரசிகர்கள் கொந்தளிப்பு!

இந்தியா அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்துள்ளமைக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவருமே காரணம் என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அண்மைய காலமாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் திட்டமிடலில் மோசமாக செயல்பட்டு வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம் விளாசிய நிலையில் அவருக்கான திட்டங்களை  செயல்படுத்த தொடங்கியது. இந்திய அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அத்துடன், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் திட்டமிடல் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது.

மேலும், ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் ரன் குவிக்கும் போது எந்த திட்டத்தையும் ரோகித் சர்மா வைத்திருக்கவில்லை. 

இப்போது, இங்கிலாந்து அணியின் போப் சதம் விளாசிய பின்னரும் எந்த திட்டத்தையும் வகுக்காமல் ரோகித் சர்மா களத்தில் தெளிவின்றி காணப்பட்டார். 

அத்துடன், செய்தியாளர்கள் சந்திப்பில் பேச பயந்து, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை அனுப்பியுள்ளார் ரோகித். 

விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி இருந்த போது, பும்ராவை தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் களமிறக்க வேண்டும் என்று 6 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டது. 

அதுமட்டுமின்றி, ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் ரஹானேவை கேப்டனாக்கியது என நிறைய மாற்றங்களை அச்சமின்றி செய்தார்கள்.

ஆனால் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் மீண்டும் மீண்டும் செய்யும் ஒரே தவறு சொந்த மண்ணிலேயே இந்திய அணி தோல்வியடைய காரணமாக மாறியுள்ளது. 

இதனால் டெஸ்ட் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை இருவரையும் மாற்ற வேண்டும் என்றும், விராட் கோலி தலைமையில் அணியை கொண்டு செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp