ரோஹித்தின் தவறான முடிவு.. இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஐசிசி... இனிமேல்தான் இருக்கு!
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்கள் சுழற் பங்குவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை தாங்கள் எடுத்ததாக ரோகித் மறைமுகமாக கூறினார்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்ட போது சாகல், குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய நான்கு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கான காரணத்தை உலகக் கோப்பை தொடரின் போது அனைவரும் தெரிந்து கொள்வார்கள் என்று ரோகித் சர்மா அப்போது கூறினார்.
அதாவது, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்கள் சுழற் பங்குவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை தாங்கள் எடுத்ததாக ரோகித் மறைமுகமாக கூறினார்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற மைதானங்களில் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படுவது போல் அமைக்கப்பட்டு ஐசிசி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில் வேகப்பந்துவீச்சால் இலங்கை அணியை சுக்கு நூறாக தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய உடைத்து வீசியது.
இந்த நிலையில், பும்ரா, முகமது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங், சிவம் துபே ,ஹர்திக் பாண்டியா போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் தான் இந்திய அணியில் உள்ளதால், இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
மேலதிக வேகப்பந்து வீச்சாளர் அணியில் இடம் பெறாதது இந்தியாவுக்கு மைனஸ் ஆக உள்ள நிலையில், ஆடுகளத்தை தவறாக கணக்கிட்டு இந்திய அணி இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.