இந்திய அணி செய்த சாதனை... இனி இந்தியா பற்றி பேசவே முடியாது

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அந்த அணியை விட இந்திய அணி அதிக சிக்ஸர்கள் அடித்து உள்ளது. 

இந்திய அணி செய்த சாதனை... இனி இந்தியா பற்றி பேசவே முடியாது

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அந்த அணியை விட இந்திய அணி அதிக சிக்ஸர்கள் அடித்து உள்ளது. 

இங்கிலாந்து அணி இந்த தொடரில் 27 சிக்ஸ் மட்டுமே அடித்துள்ளது. ஆனால், இந்தியா அதிரடியாக 72 சிக்ஸர்கள் அடித்துள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 26 சிக்ஸ் அடிக்க, சுப்மன் கில் 11 சிக்ஸ் அடித்து இருக்கிறார். இந்த தொடரில் ஆடிய 14 இந்திய வீரர்கள் சிக்ஸ் அடித்து இருக்கின்றனர்.

ஆனால், இங்கிலாந்து அணியில் அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி அதிகபட்சமாக 6 சிக்ஸ் அடித்து இருக்கிறார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 5 சிக்ஸர்களை தாண்டவில்லை.

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 13 சிக்ஸர்கள் அடித்துள்ளது. 

ஜெய்ஸ்வால் 3 சிக்ஸர்கள், ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள், சுப்மன் கில் 5 சிக்ஸர்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தனர்.

இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரே அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...