ரோஹித்துடன் அணியை விட்டு விலகப் போகும் 2 முக்கிய வீரர்கள்.. அதிர்ச்சி தகவல்!
ஹர்திக் பாண்டியா பயிற்சி செய்ய வந்தபோது அவர்கள் மூவரும் மைதானத்தின் மறுபுறத்துக்கு ஒன்றாக சென்று விட்டதாகவும் பேசப்படுகின்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முடிவில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகுவார் என கூறப்படும் நிலையில், மேலும் இரண்டு முக்கிய வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஒன்றாக வலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது, அங்கு ஹர்திக் பாண்டியா பயிற்சி செய்ய வந்தபோது அவர்கள் மூவரும் மைதானத்தின் மறுபுறத்துக்கு ஒன்றாக சென்று விட்டதாகவும் பேசப்படுகின்றது.
இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் ரோஹித் சர்மா பக்கம் இருப்பதாக பார்க்கப்படுகின்றது.
2024 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்ததை விட மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவு இன்னும் பெரிதாக மாறி உள்ளதுடன், அந்த அணி இன்னும் ஒரு லீக் போட்டியில் மட்டுமே விளையாட உள்ளது.
2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளதால், ஒரு அணி 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை விடுவித்து விட்டு, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக வர்மாவை தக்க வைக்க திட்டமிட்டு இருந்தது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா, ரோஹித் சர்மாவுடன் அணியை விட்டு விலக விருப்பம் தெரிவித்தால், ஹர்திக் பாண்டியா, பும்ரா, இஷான் கிஷன் மற்றும் வேறு ஒரு வீரரை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்க வைக்க முடியும்.