பிளேயிங் 11இல் மாற்றம்... சீனியரால் ஏற்பட்ட சிக்கல்... ரிஸ்க் எடுப்பாரா ரோஹித் சர்மா... முடிவு இதுதான்!

குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி காணப்படுகின்றது.

பிளேயிங் 11இல் மாற்றம்... சீனியரால் ஏற்பட்ட சிக்கல்... ரிஸ்க் எடுப்பாரா ரோஹித் சர்மா... முடிவு இதுதான்!

நடப்பு டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளன. இந்திய அணியை வீழ்த்தினால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் ஆஸ்திரேலிய அணி இருக்கின்றது.

எனினும், குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  

குரூப் சுற்றிலிருந்து இதுவரை இந்தியா ஆடிய ஐந்து போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. குரூப் சுற்றில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் விளையாடிய நிலையில், சூப்பர் 8 சுற்றில் அவரை நீக்கி விட்டு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்த்தார் ரோகித்.

இந்த நிலையில் முக்கியமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ரிஸ்க் எடுத்து அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவை நீக்குவாரா? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இதுவரை நடந்த ஐந்து போட்டிகளிலும் எந்த விதத்திலும் அணிக்கு உதவியாக ரவீந்திர ஜடேஜா ஆடவில்லை. அவரால் ரன் குவிக்க முடியுமா? என்ற சந்தேகத்தில் அவரை ஏழாவது வரிசையில் பேட்டிங் இறக்கக் கூட கேப்டன் ரோஹித் சர்மா தயக்கம் காட்டியிருந்தார்.

அதுமட்டுமின்றில, பந்துவீச்சிலும் ஜடேஜாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடைபெற உள்ள செயின்ட் லூசியா மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக காணப்படுகின்றது.

எனவே, ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான சாஹலை அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் கூறியுள்ளனர்.

எனினும், கேப்டன் ரோஹித் சர்மா அணியை மாற்ற மாட்டார் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது. உலகக் கோப்பை போன்ற நீண்ட தொடர்களில் தொடர்ந்து 11 வீரர்கள் கொண்ட ஒரே அணியுடன் பயணிப்பது சிறந்த தீர்மானமாக இருக்கும். 

தேவைக்கேற்ப வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்களிடையே மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அதை மட்டும் தான் இந்திய அணி இதுவரை செய்து வந்துள்ளது. எனவே, ஜடேஜாவை நீக்க வாய்ப்பு குறைவு. 

சிலர் சிவம் துபேவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை களம் இருக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். எனினும், வங்கதேச அணிக்கு எதிராக 24 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார் சிவம் துபே. அதனால், அவரையும் அணியை விட்டு நீக்க வாய்ப்பு இல்லை.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp