டெஸ்ட் தொடரில் இருந்து தானாகவே விலகும் ரோஹித் சர்மா: புது கேப்டன் யார் தெரியுமா?

நடப்பு ஐபிஎல் சீசன் மே 25ஆம் தேதி நறைவுபெற உள்ளது. இத்தொடர் முடிந்தப் பிறகு இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்ல உள்ளது. 

Apr 28, 2025 - 18:54
Apr 28, 2025 - 19:20
டெஸ்ட் தொடரில் இருந்து தானாகவே விலகும் ரோஹித் சர்மா: புது கேப்டன் யார் தெரியுமா?

நடப்பு ஐபிஎல் சீசன் மே 25ஆம் தேதி நறைவுபெற உள்ளது. இத்தொடர் முடிந்தப் பிறகு இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்ல உள்ளது. 

டெஸ்ட் தொடருக்கு முன்தாக, லிஸ்ட் ஏ போட்டிகள் இரண்டு நடைபெறவுள்ளதுடன், ஒவ்வொரு போட்டியும் 4 நாட்கள் நடைபெறும். 
முதல் போட்டி மே 30ஆம் தேதியும், அடுத்த போட்டி ஜூன் 6ஆம் தேதியும் நடைபெறும்.

இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயருக்கு இடம் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளதுடன், அவர் சமீபத்தில், ரஞ்சிக் கோப்பை தொடரில் 4 சதம், 2 அரை சதம் உட்பட 54 சராசரியில் 863 ரன்களை குவித்தார். 

இவரது அதிரடி காரணமாக, பைனலில் கேரளாவை வீழ்த்தி விதர்பா அணி கோப்பை வென்றது. இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து தானாகவே விலக, ரோஹித் சர்மா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னதாக, பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் 31 ரன்களை மட்டும் எடுத்துவிட்டு, கடைசி டெஸ்டில் தானாகவே விலகினார்.

தற்போதும் ரோஹித் சர்மா டெஸ்டில் சரியாக பார்மில் இல்லாத நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலக விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்து உள்ளாராம்.

இதனால், ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக, யாஷஸ்வி ஜெய்ஷ்வாலுடன் கே.எல்.ராகுல் ஓபனராக இருக்கிறார். மேலும், கேப்டனாக ஷுப்மன் கில் செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

பும்ராவுக்கு ஏற்கெனவே அதிக வேலைபளு இருக்கும் என்பதால், அவருக்கு துணைக் கேப்டன் பதவியை மட்டும் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி ஆரம்பமாக உள்ளதால், இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துவிட்டதாகவும், மே முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!