ஒருநாள் தொடருக்கான இந்திய அணி... 2 முக்கிய வீரர்கள் நீக்கம்.. பட்டியல் இதோ!
இந்திய டி20 அணித் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை. கடைசியாக தென்னாபிரிக்க டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்படலாம்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி, ஜனவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு, இந்தியா வரும் இங்கிலாந்து அணி, 8 போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது.
முதலில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 22, 25, 28, 31 மற்றும் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறுவதுடன், தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், பிப்ரவரி 6, 9, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இந்த நிலையில், இந்திய டி20 அணித் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை. கடைசியாக தென்னாபிரிக்க டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்படலாம்.
ஆனால், ஒருநாள் அணிதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கு தேர்வாகும் இந்திய அணிதான், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் என்பதால், இத்தொடருக்கான இந்திய அணியை, எப்போது அறிவிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், உத்தேச பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது.
கேப்டனாக ரோஹித் சர்மா உடன் ஷுப்மன் கில், விராட் கோலி போன்றவர்கள் இடம்பெற உள்ளனர். கடைசியாக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரோஹித் சர்மா, 3 போட்டிகளில் 52.33 சராசரி, 141.44 ஸ்ட்ரைக் ரேட்டில், 157 ரன்களை குவித்தார்.
இதனால், ஒருநாள் பார்மெட்டில், இதே பார்முடன் திரும்பினால் நன்றாக இருக்கும். டாப் ஆர்டரில், பேக்கப் வீரராக யாஷஸ்வி ஜெய்ஷ்வால் இருக்க வாய்ப்புள்ளது.
மிடில் வரிசையில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோருடன் ஷ்ரேயஸ் ஐயரும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில், உள்ளூர் தொடர்களில் ஷ்ரேயஸ் ஐயர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.
ஆல்-ரவுண்டர்கள் இடங்களில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற அதிக வாய்புள்ளது. மேலும், பேக்கப் வீரர் இடத்தில், நிதிஷ் ரெட்டியை சேர்க்க வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், ஜஸ்பரீத் பும்ரா அதிக ஓவர்களை வீசிவிட்டதால், இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை. முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் போன்றவர்கள் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்திய உத்தேச அணி
- ரோஹித் சர்மா (கேப்டன்)
- ஷுப்மன் கில்
- யாஷஸ்வி ஜெய்ஷ்வால்
- விராட் கோலி
- ஷ்ரேயஸ் ஐயர்
- ரிஷப் பந்த்
- கே.எல்.ராகுல்
- ஹர்திக் பாண்டியா
- நிதிஷ் ரெட்டி
- அக்சர் படேல்
- வாஷிங்டன் சுந்தர்
- முகமது சிராஜ்
- அர்ஷ்தீப் சிங்
- ஹர்ஷித் ராணா
- வருண் சக்ரவர்த்திசக்ரவர்த்தி