விராட் கோலிக்கு மீண்டும் கேப்டன் பதவி பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
துலீப் ட்ராபியில் பங்கேற்க உள்ள நான்கு அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருப்பார் என கூறப்படுகிறது.
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்ட பின் எந்த அணிக்கும் அவர் கேப்டனாக இருக்கவில்லை. இந்த நிலையில், அவர் மீண்டும் கேப்டனாகும் வாய்ப்பு வந்துள்ளது.
இந்திய அளவிலான டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடர் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்க உள்ள நிலையில், இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி என நான்கு அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.
இதில் இந்திய அணியின் டெஸ்ட் வீரர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளதுடன், மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இதில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகின்றது.
துலீப் ட்ராபியில் பங்கேற்க உள்ள நான்கு அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருப்பார் என கூறப்படுகிறது.
அதே போல, விராட் கோலி இதில் ஒரு அணியின் கேப்டனாக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சுப்மன் கில் மற்றும் கே எல் ராகுல் மற்ற இரண்டு அணிகளுக்கு கேப்டன்களாக இருப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் எந்த அணிக்கும் கேப்டனாக இருக்க விரும்பாத நிலையில் அவர் துலீப் டிராபி தொடரில் கேப்டனாக இருக்க ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
எனினும், செப்டம்பர் 5 அன்று துவங்க உள்ளது துலீப் டிராபி தொடரில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாட வாய்ப்பு உள்ளது.
விராட் கோலி இரண்டாவது போட்டியில் மட்டும் தான் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.