அணியில் இருந்து ரோஹித்தை நீக்கிய தோனி.. நடந்தது இதுதான்... முன்னாள் உறுப்பினர் வெளியிட்ட தகவல்!

தோனி இந்த முடிவை எடுத்தவுடன்  பல்டி அடித்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பியுஷ் சாவ்லா தான் சரியான தேர்வு என கூறினார். 

அணியில் இருந்து ரோஹித்தை நீக்கிய தோனி.. நடந்தது இதுதான்... முன்னாள் உறுப்பினர் வெளியிட்ட தகவல்!

2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் சரியான காரணம் எதுவும் இன்றி ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். இந்த நிலையில், அணியை தேர்வு செய்த தேர்வு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ராஜா வெங்கட் அப்போது என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை கூறி உள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பை, 2009 மற்றும் 2010 டி20 உலகக் கோப்பை அணிகளில் இடம் பெற்று இருந்த ரோஹித் சர்மா,  மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும், பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராகவும் இருந்தார். 

இந்த நிலையில். அவர் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் மாற்று வீரராகவாவது இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அத்துடன், தேர்வு குழுவினரும் ரோஹித் சர்மாவை 15 வது வீரராக அணியில் சேர்த்து இருந்ததுடன், அப்போதைய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் ரோஹித் சர்மாவை தேர்வு செய்ய ஒப்புக்கொண்டார்.

இறுதியாக தேர்வு குழுவினர் தேர்வு செய்த பதினைந்து வீரர்கள் பட்டியலை கேப்டன் தோனிக்கு அனுப்பிய நிலையில்,  15 வது வீரராக சேர்க்கப்பட்டிருந்த ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக முழு நேர சுழற் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா பெயரை சேர்க்குமாறு தோனி தேர்வு குழுவினரிடம் கூறினார்.

தோனி இந்த முடிவை எடுத்தவுடன்  பல்டி அடித்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பியுஷ் சாவ்லா தான் சரியான தேர்வு என கூறினார். 

கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருமே ரோஹித் சர்மாவை நீக்க சொன்னதால் வேறு வழி இன்றி தேர்வுக் குழுவினர் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு பியூஷ் சாவ்லாவை சேர்த்தனர். 

இதுகுறித்து ராஜா வெங்கட் பேசுவையில், "நாங்கள் அணித் தேர்வுக்காக பேசும்போது ரோஹித் சர்மா குறித்து விவாதித்தோம். அவர் உலகக் கோப்பை அணியில் இடம் பெறக்கூடிய வீரராகவே இருந்தார். 

அப்போது இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் நடைபெற்றுக் கொண்டு இருந்ததால், நானும் மற்றொரு தேர்வுக் குழு உறுப்பினர் யாஸ்பால் சர்மாவும், தென்னாப்பிரிக்காவில் இருந்தோம்.

அதேநேரம் ஸ்ரீகாந்த், சுரேந்திர பாவே மற்றும் நரேந்திர ஹிர்வானி ஆகிய ஏனைய மூன்று தேர்வு குழுவினரும்  சென்னையில் இருந்தனர்.  நாங்கள் இணைந்து முதல் 14 வீரர்களை தேர்வு செய்தோம். அதை பிசிசிஐ அதிகாரிகள் குழு ஒப்புக்கொண்டது. அடுத்து 15 வது வீரராக ரோஹித் சர்மா பெயரை கூறினோம்.

கேப்டனோ பியூஷ் சாவ்லா தான் வேண்டும் என்றார். அதனால் தான் ரோஹித் சர்மாவை நாங்கள் நீக்க வேண்டியதாகி விட்டது. அப்போது ரோஹித் சர்மாவிடம் இது குறித்து பேசக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. அவரை தேர்வு செய்யாதது எங்களுக்கும் ஏமாற்றமாகவே இருந்தது." என்றார் ராஜா வெங்கட்.

பின்னர் இந்திய அணி 2011 டி20 உலகக் கோப்பையை வென்றதை அடுத்து தோனியின் தேர்வுதான் சரி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியதாகி விட்டது. 

எனினும், ரோஹித் சர்மா உலகக்கோப்பை வாய்ப்பை இழந்ததாலும், அதன் பின் கடுமையாக உழைத்து இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றார். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எந்த கேப்டன் தோனி அவரை அணியிலிருந்து நீக்கினாரோ, அவரே ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வை உச்சத்துக்கு கொண்டு செல்லும் வகையில், ஆரம்ப வீரராக களம் இறக்கினார். அப்போதிருந்து இப்போது வரை உலகின் சிறந்த ஆரம்ப வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp