தோனி, சச்சின் சாதனையை தகர்த்து... கேப்டனாக வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

ரோஹித் கடந்த 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அரை சதம் கூட அடிக்காமல் இருந்த நிலையில், ரோஹித் சதம் அடித்தார்.

தோனி, சச்சின் சாதனையை தகர்த்து... கேப்டனாக வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனக் கருதப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. பவுன்ஸ், ஸ்விங் எதுவும் தென்படவில்லை.

பந்துகள் லட்டுபோல் பேட்டிங்கிற்கு வந்தபோதும், ரோஹித் சர்மா அதனை சரியாக எதிர்கொள்ளவில்லை. அதிகமுறை எட்ஜ்தான் ஆனது. புல்லர் லெந்தில் வந்த இரண்டு பந்துகளைதான், ஸ்ட்ரைட் டிரைவ் மூலம் பவுண்டரி அடித்தார். 

மற்றபடி, அவர் பதற்றத்துடன் ஆடியதால், ஜெய்ஷ்வால் அட்டாக் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில், ஜெய்ஷ்வால் 321 ரன்களை குவித்த நிலையில், தற்போது, மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 10 (10) ரன்களைதான் அடுத்துள்ளார். 

அடுத்து, ஷுப்மன் கில்லும் 0 (9) டக்அவுட் ஆனார். இருவரையும் மார்க் உட் தான் வீழ்த்தினார். தொடர்ந்து, டாம் ஹர்ட்லி வீசிய பந்தில் ராஜத் படிதர் 5 (15) ஆட்டமிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய அணி 33/3 என தடுமாறியதால், உடனே, ரவீந்திர ஜடேஜாவை களத்திற்குள் கொண்டு வந்தார்கள். அப்போது, 12.6ஆவது பந்தில் டாம் ஹர்ட்லி சுழலில் ரோஹித் சர்மா, ஸ்லிப் கேட்ச் கொடுக்க, அதனை ஜோ ரூட் பிடிக்காமல் விட்டார். அப்போது ரோஹித் 29 ரன்களைதான் அடித்திருந்தார்.

அந்த கேட்ச் மிஸ்ஸிற்கு பிறகு, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாட ஆரம்பித்தார்கள். ரோஹித் கடந்த 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அரை சதம் கூட அடிக்காமல் இருந்த நிலையில், ரோஹித் சதம் அடித்தார்.

இப்போட்டியில் ரோஹித் சர்மா, 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், டெஸ்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

ரோஹித் தற்போதுவரை 79* சிக்ஸர்களை அடித்துள்ளார். தோனி 78 சிக்ஸர்களையும், சச்சின் 78 சிக்ஸர்களையும் அடித்து 3 மற்றும் 4ஆவது இடத்தில் இருக்கிறார்கள். 

சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். கேப்டனாக ரோஹித் முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp