தண்ணீர் பாட்டிலை தூக்கவிட்ட கம்பீர்... ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட நிலை!

டி20 உலக கோப்பை வென்ற பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

தண்ணீர் பாட்டிலை தூக்கவிட்ட கம்பீர்... ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட நிலை!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. இந்த நிலையில் அவரை தண்ணீர் பாட்டில் தூக்க விட்ட சம்பவத்தால் ரசிகர்கள் சோகமடைந்து உள்ளனர்.

டி20 உலக கோப்பை வென்ற பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட், இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடர் என அவர் தோல்விகளை சந்தித்து உள்ளார்.

அத்துடன், ரோகித் சர்மா அரைசதம் அடித்து பத்து இன்னிங்ஸ்க்கு மேல் ஆகிவிட்டதுடன், நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா மண்ணில் ரோகித் சர்மா ஐந்து இன்னிங்ஸில் 31 ரன்கள் மட்டுமே அடித்து உள்ளார்.

இதனால் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற வேண்டும் என கூறப்பட்ட நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்த போது ரோகித் சர்மா தண்ணீர் பாட்டிலை தூக்கிக்கொண்டு களத்திற்கு வந்து வீரர்களுக்கு தண்ணீர் வழங்கினார். 

இது பார்த்த ரசிகர்கள் டி20 உலக கோப்பையை வென்ற ஒரு கேப்டனுக்கு ஏற்பட்ட நிலையா என்றும் ரோஹித் சர்மாவை கம்பீர் தண்ணீர் பாட்டில் தூக்க விட்டதாக வருத்தப்பட்டு வருகின்றனர். 

எனினும் கேப்டன் என்ற முறையில் ரோகித் சர்மா அணிக்கு யோசனை வழங்கவே தண்ணீர் பாட்டிலுடன் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp