2 பவுண்டரி அடித்தும் ரன் இல்லை... அதிர்ச்சியில் ரோஹித்,  நடுவரின் தவறால் கடுப்பான ரசிகர்கள்

ரோகித் சர்மா பவுண்டரி அடித்தும் அதற்கு நடுவர் பைஸ் வழங்கியது அவரது ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.

2 பவுண்டரி அடித்தும் ரன் இல்லை... அதிர்ச்சியில் ரோஹித்,  நடுவரின் தவறால் கடுப்பான ரசிகர்கள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில்  14 மாதங்களுக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

முதல் இரண்டு டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இதனால், மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா கண்டிப்பாக ஓட்டம் எடுக்கவேண்டிய நெருக்கடியில் களமிறங்கினார். 

முதல் ஓவரில் பரீத் அஹ்மத் வீசிய பந்து ரோகித் சர்மா அடிக்க பவுண்டரிக்கு சென்றது. ஆனால் நடுவர் இதற்கு பவுண்டரி வழங்காமல் லெக் பைஸ் வழங்கினார். 
மேலும், அடுத்து ஓவரின் கடைசி பந்தும் ரோகித் சர்மா அடித்தது அவருடைய இடுப்பில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதற்கும் அவருக்கு நான்கு ஓட்டங்கள் வழங்கப்படவில்லை.

ஓவரின் இறுதியில் இதனை கவனித்த ரோகித் சர்மா நடுவரிடம் கேட்டதுடன், அடுத்த ஓவரில் ஒரு ரன்னும் ஒரு பவுண்டரையும் அடித்து தனது ஸ்கோரிங் கணக்கை தொடங்கினார்.

இந்த நிலையில், ரோகித் சர்மா பவுண்டரி அடித்தும் அதற்கு நடுவர் பைஸ் வழங்கியது அவரது ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp