எந்த கேப்டனும் செய்யாத சாதனை... மாபெரும் வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்றாலும், 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது.

எந்த கேப்டனும் செய்யாத சாதனை... மாபெரும் வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

ஐசிசி நடத்தும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் அனைத்தின் இறுதிப் போட்டிகளுக்கும் தனது அணியை அழைத்துச் சென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள ரோஹித் சர்மா, உலகிலேயே எந்த கேப்டனும் செய்யாத இமாலய சாதனையை படைத்துள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய நான்கு தொடர்களின் இறுதிப் போட்டிக்கும் ரோஹித் சர்மா இந்திய அணியை அழைத்துச் சென்று இருக்கிறார் . இந்த சாதனையை உலகில் வேறு எந்த கேப்டனும் இதுவரை செய்தது இல்லை. 

அத்துடன், ரோஹித் சர்மா  இந்த சாதனையை வெறும் 2 ஆண்டு இடைவெளியில் செய்து உள்ளார். கடந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் முன்னேறி இருந்தது.  அதன் பின் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்றாலும், 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது.

இந்த நிலையில், தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணியை அழைத்து சென்று இருக்கிறார் ரோஹித். 

இதனையடுத்து, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அண்மைய காலமாக டெஸ்ட் தொடர்களில் பெற்ற தோல்விகளால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து கடுமையான விமர்சனம் எழுந்திருந்தது. 

ஆனால், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது கேப்டன்சி இன்னும் உச்சத்தில் தான் இருக்கிறது என்பதை  ரோஹித் சர்மா தற்போது காட்டி இருக்கின்றால்.

இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளதுடன், அதில் வெற்றி பெறும் அணி இந்திய அணிக்கு எதிராக இறுதி போட்டியில் மோதும்.

மார்ச் 9 அன்று நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.