தயார் செய்யப்படும் புதிய கேப்டன்.. ரோஹித் நிலை என்ன? இளம் வீரர் மீது கவனம் செலுத்துவது ஏன்?
ஜிம்பாப்வே டி20 தொடருக்கு பின் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருவதை பார்க்கின்றோம்.
நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை அடுத்து, இந்திய டெஸ்ட் அணியில் மிக முக்கிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு பிசிசிஐ தயாராகி வருகின்றது.
இதன்போது, கேப்டன் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதுடன், இளம் வீரர் ஒருவுரை அணியில் தலைவராக கொண்டுவர இப்போதே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகின்றது.
அதாவது, ஜிம்பாப்வே டி20 தொடருக்கு பின் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருவதை பார்க்கின்றோம்.
துலீப் டிராபி, இராணி கோப்பை, ரஞ்சி டிராபி மற்றும் இந்தியா ஏ அணிகளின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், அவர், திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அத்துடன், வங்கதேச டி20 தொடர், தென்னாப்பிரிக்கா டி20 தொடர் உள்ளிட்ட இந்திய அணிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் சேர்த்து கொள்ளப்படாத நிலையில், முழுக்க முழுக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த நிலையில், இந்திய அணி அடுத்த 8 மாதங்களில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
அத்துடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வானால், அந்தப் போட்டியிலும் இந்திய அணி விளையாடும்.
அத்துடன், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 38 வயதை எட்டும் நிலையில், இந்திய அணியின் மாற்று தொடக்க வீரரை தயார் செய்ய கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் தயாராகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டுதான், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வைக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி தோல்வியை தழுவினால், அணியில் இருந்து பல வீரர்கள் நீக்கப்படுவார்கள்.
அடுத்தக் கட்ட வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டிய தேவை உள்ளதால், விராட் கோலியை தவிர்த்து ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் விரைவில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகின்றது. பொறுத்திருந்து பார்க்கலாம்.