புறக்கணிக்கப்பட்ட ரோஹித் சர்மா! விராட் கோலியால் ஏற்பட்ட நிலை! புலம்பும் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் புகைப்படத்தை பயன்படுத்தும் போது, அவருடன் இந்திய கேப்டனின் புகைப்படத்தை தான் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

புறக்கணிக்கப்பட்ட ரோஹித் சர்மா! விராட் கோலியால் ஏற்பட்ட நிலை! புலம்பும் ரசிகர்கள்

இந்தியா மற்றம் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உள்ள டெஸ்ட் தொடரை நேரடியாக ஒளிபரப்ப உள்ள ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனம் ரோஹித் சர்மாவை புறக்கணித்துள்ளதாக அவரது  ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த டெஸ்ட் தொடருக்காக பயன்படுத்தும் விளம்பரங்கள் அனைத்திலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் புகைப்படம் மட்டுமே உள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் புகைப்படத்தை பயன்படுத்தும் போது, அவருடன் இந்திய கேப்டனின் புகைப்படத்தை தான் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவரது புகைப்படத்தை அந்த தொலைக்காட்சி பயன்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் ஒருவரது சாதனைகளை ஒருவர் முந்தி வருவதுடன்,  அவர்களுக்கு இடையே போட்டி நிலவி வருவதால் அவர்கள் இருவரது புகைப்படங்களையும் குறித்த தொலைக்காட்சி விளம்பரம் செய்திருக்கலாம். 

ஆனால், வேண்டுமென்றே ரோஹித் சர்மாவை புறக்கணித்து இருப்பதன் மூலம் அவரது முக்கியத்துவத்தை அந்த தொலைக்காட்சி குறைத்து மதிப்பிட்டு இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதை செய்யாவிட்டால் இந்திய அணியில் இருந்து நீக்கம்.. சிக்கலில் இளம் வீரர்

முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்படுவதால் தற்காலிக கேப்டன் பும்ராவின் புகைப்படத்தை தான் விளம்பரத்தில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

தற்போது, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, இருவரும் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்கள் இருவரும் 6 இன்னிங்ஸ்களில் 100 ஓட்டங்களை கூட தாண்டவில்லை. இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர்கள் இருவரும் பங்கேற்க உள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp