ஊடக சந்திப்புக்கு பின்னர் ரோஹித் சர்மா செய்த செயல்.. மறதியால் ஏற்பட்ட சம்பவம்!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதால் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

ஊடக சந்திப்புக்கு பின்னர் ரோஹித் சர்மா செய்த செயல்.. மறதியால் ஏற்பட்ட சம்பவம்!

நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 12 ஆண்டுகள் கழித்து தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த கோப்பையை கைப்பற்றி இருக்கின்றது.

அத்துடன், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதால் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

கடந்த வருடம் டி20 உலக கோப்பையை கைப்பற்றிய அடுத்த சில மாதங்களிலேயே இந்திய அணி இந்த கோப்பையை  கைப்பற்றிய நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பின்னர், கேப்டன் ராகித் சர்மா கோப்பையுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதன்போது, ரோஹித் சர்மான செய்த சம்பவம் ஒன்று தான் தற்போது அவரது மறதியை மீண்டும் ஞாபகப்படுத்தி கலகலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோகித் சர்மா கோப்பையை தனது அருகில் வைத்திருந்தார். சந்திப்பு முடிந்ததும் உடனடியாக அவர் கோப்பையை மறந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். 

இதனையடுத்து, அதனை கவனித்த ஒரு பத்திரிகையாளர் ஒருவர் கோப்பையை கொண்டு சென்று ரோகித் சர்மா கைகளில் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே ரோகித் சர்மாவிற்கு ஞாபக மறதி இருப்பது குறித்து விராட் கோலி நகைச்சுவையாக கூறியிருந்த நிலையில், ரோகித் சர்மா கோப்பையை மறந்து சென்ற விவகாரம் மீண்டும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.