அதிக முறை டக் அவுட் ஆகி ரோகித் சர்மா படைத்த சாதனை... சோகத்தில் ரசிகர்கள்!

இந்திய பேட்டிங்கை தொடங்கிய 2வது பந்திலேயே ரோகித் சர்மா ரன் அவுட்டாகி ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் பெவிலியனை திரும்பினார்.

அதிக முறை டக் அவுட் ஆகி ரோகித் சர்மா படைத்த சாதனை... சோகத்தில் ரசிகர்கள்!

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 14 மாதங்களுக்கு பின் மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பினார் ரோகித் சர்மா. 

இதனையடுத்து, ரோகித் சர்மா தனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இதனால் ஆஃப்கானுக்கு எதிரான முதல் டி20 போட்டி ரோகித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

159 ரன்கள் என்ற சாதாரண இலக்கை விரட்ட ரோகித் சர்மா களமிறங்கிய போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

ஆனால் இந்திய பேட்டிங்கை தொடங்கிய 2வது பந்திலேயே ரோகித் சர்மா ரன் அவுட்டாகி ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் பெவிலியனை திரும்பினார்.

அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில்லை திட்டிக் கொண்டே  ரோகித் சர்மா பெவிலியனை நோக்கி நடந்து வந்தார்.  இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, இந்த டி20 போட்டி ரோகித் சர்மாவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.

ரோஹித் சர்மாவை சீண்டிய இளம் வீரர்.. டிராவிட் செய்த காரியம்... உலகக்கோப்பை வாய்ப்பு அவ்வளவுதான்!

எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணி மிகச்சிறந்த வெற்றியை பெற்றதுடன், இதன் மூலம் 100வதுடி20 போட்டியில் வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். 

அதேபோல், இந்திய டி20 வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதுவரை ரோகித் சர்மா 11 முறையும், கேஎல் ராகுல் 5 முறையும் டக் அவுட்டகியுள்ளனர். அதேபோல் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து ரோகித் சர்மா 32வது முறையாக டக் அவுட்டாகியுள்ளார். 

இந்த பட்டியலில் இல் ஜாகீர் கான் முதலிடத்தில் உள்ள நிலையில், 7வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp