ஹர்திக் கண் முன்னே ரோஹித் சர்மா செய்த காரியம்... செம ட்விஸ்ட்!

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகின்றது. இந்த பயிற்சி போட்டிக்காக இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

ஹர்திக் கண் முன்னே ரோஹித் சர்மா செய்த காரியம்... செம ட்விஸ்ட்!

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகின்றது. இந்த பயிற்சி போட்டிக்காக இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக களம் இறக்கியதாக கூறப்படும் சிவம் துபேவுக்கு ரோஹித் சர்மா சிறப்பு பந்துவீச்சு பயிற்சியை அளித்தமை பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சிஎஸ்கே அணியில் இடம் பெறுவதற்கு முன் சராசரியான பேட்ஸ்மேனாகவும், சராசரியான வேகப் பந்துவீச்சாளராகவும் இருந்த   சிவம் துபேவை ஐபிஎல் தொடரில் பட்டை தீட்டிய தோனி? அவரை முழு நேர பேட்ஸ்மேனாக மாற்றினார்.

அதன் பின்னர், டி20 போட்டிகளில் மிடில் ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக சிவம் துபே மாறி, உலகக்கோப்பைக்கான இந்திய டி20 அணியிலும் இடம் பிடித்தார்.

இதேவேளை, ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இடையே விரிசல் இருப்பதாக கூறப்படுவதுடன்,  ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்தே அவர் மீது ரோஹித் சர்மா அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சிவம் துபே தற்போது பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்தாலும், அவரை வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்துவதில் கேப்டன் ரோஹித் சர்மா தீவிரம் காட்டி வருகின்றார்.

இதை அடுத்துதான் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கு முன்னதாக சிவம் துபேவுக்கு வேகப் பந்துவீச்சுக்கான சிறப்பு பயிற்சியை தானே வழங்கினார் ரோஹித் சர்மா.

பொதுவாக பந்துவீச்சு பயிற்சியாளரோ, தலைமை பயிற்சியாளரோ அல்லது மூத்த பந்துவீச்சாளர்களோ தான் ஒரு புதிய பந்து வீச்சாளருக்கு பயிற்சி அளிப்பார்கள். ஆனால், இங்கு கேப்டன் ரோஹித் சர்மா சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக சிவம் துபேவுடன் செலவிட்டார்.

பந்து வீச்சு தொடர்பில் நிறைய அறிவுரைகளை அளித்தார் ரோஹித் சர்மா,  இதன் மூலம் சிவம் துபேவை, ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக மாற்ற திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய அணியில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இடம்பெற்று உள்ள நிலையில், அவரை அணியை விட்டு நீக்குவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. 

அதேசமயம் ஒரே போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே என இருவரையும் ஆட வைத்தால் அது ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அழுத்தத்தை கொடுக்கும் என கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp