எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை... ரோஹித் சர்மா படைத்த சரித்திரம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத புதிய சாதனையை ரோஹித் சர்மா.  படைத்துள்ளார்.

எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை... ரோஹித் சர்மா படைத்த சரித்திரம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத புதிய சாதனையை ரோஹித் சர்மா.  படைத்துள்ளார்.

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா சதம் அடித்தார்.

இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்த போது ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவுடன் கூட்டணி அமைத்து தனது 11வது டெஸ்ட் போட்டி சதத்தை நிறைவு செய்தார்.

ரோஹித் அடித்த சதம் இந்தியாவுக்கு சாதகமாக மாறியதுடன், இந்தப் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. 

இதன் மூலம்,  டெஸ்ட் கிரிக்கெட்டில் 10க்கும் மேற்பட்ட சதம் அடித்து, அந்த போட்டிகளில் எல்லாம் வெற்றியும் பெற்ற ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே  என்ற சாதனையை புதிதாக செய்து இருக்கிறார்.

ரோஹித் சர்மா இதுவரை 11 சதம் அடித்து இருக்கும் நிலையில், அந்தப் போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன், ஐந்துக்கும் மேற்பட்ட சதம் அடித்து, அந்தப் போட்டிகளில் எல்லாம் வெற்றிகளை பெற்றுள்ள வீரர்களில் ரோஹித் சர்மாவை தவிர்த்து நான்கு வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

அவர்களில், ட்ராவிஸ் ஹெட் (7 சதம்), வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் (6 சதம்), டேரன் லேமன் (5 சதம்), ஒல்லி போப் (5 சதம்)  ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேலும், வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா ஐந்தாவது இடம் பெற்றுள்ளார் 

இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (20 சதம்), ராகுல் டிராவிட் (15 சதம்), விராட் கோலி (13 சதம்), புஜாரா (13 சதம்), ரோஹித் சர்மா (11 சதம்) உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp