கங்குலி - தோனியால்  கூட முடியாததை செய்து காட்டுவாரா ரோகித் சர்மா? கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு!

ரோகித் சர்மா தலைமையில் சென்றுள்ள இந்திய அணி தென்னாபிரிக்க மண்ணில் புதிய வரலாற்றை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கங்குலி - தோனியால்  கூட முடியாததை செய்து காட்டுவாரா ரோகித் சர்மா? கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளது.

அசாரூதீன், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி உள்ளிட்ட இந்திய கேப்டன்களால் தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரில் வென்றதில்லை. 

இந்த நிலையில் அவர்களால் செய்ய முடியாத சாதனையை ரோகித் சர்மா செய்வாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

ஐபில் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதானால், ரோகித் சர்மாவின் டி20 கிரிக்கெட் வாழ்க்கையையே மும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஏற்கெனவே இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது டெஸ்ட் அணியின் கேப்டன்சி மட்டுமே ரோகித் சர்மாவின் கைகளில் உள்ளது. 

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்று சென்சுரியன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதுவரை 8 முறை இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டி... இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி? ரோகித் சர்மாவின் முடிவு என்ன?

1992ல் முகமது அசாரூதீன் தலைமையிலும், 1996ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலும், 2001ல் கங்குலி தலைமையிலும், 2006 -07ல் ராகுல் டிராவிட் தலைமையிலும், 2010-11 மற்றும் 2013-14 ஆகிய ஆண்டுகளில் தோனி தலைமையிலும், 2018-19 மற்றும் 2021-22ல் விராட் கோலி தலைமையிலும் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தது.

எனினும், அதில் ஒரு முறை கூட இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. இதுவரை நடைபெற்ற 23 டெஸ்ட் போட்டிகளில் 4ல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. 

இதனால் ரோகித் சர்மா தலைமையில் சென்றுள்ள இந்திய அணி தென்னாபிரிக்க மண்ணில் புதிய வரலாற்றை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும், 36 வயதை எட்டியுள்ள ரோகித் சர்மா தனது கடைசி கட்ட கிரிக்கெட் வாழ்வை எட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலகக்கோப்பை இறுதியில் தோல்வியடைந்த நிலையில், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்று தனது கேப்டன்சியை நிரூபிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp