கோலி இல்லனா இந்திய அணியின் நிலைமை இதுவா? அப்போ ரோகித் என்னத்துக்கு? கொந்தளிக்கும் வீரர்கள்!

இங்கிலாந்துக்கு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவி உள்ளது.

கோலி இல்லனா இந்திய அணியின் நிலைமை இதுவா? அப்போ ரோகித் என்னத்துக்கு? கொந்தளிக்கும் வீரர்கள்!

இங்கிலாந்துக்கு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவி உள்ளது.

இங்கிலாந்து வீரர் ஆலி போப்பின் அபார ஆட்டத்தால் இந்தியாவின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இது ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கு மிகப்பெரிய  பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் விராட் கோலி அணியில் இல்லை என்றால் இதுதான் அணியின் நிலைமை இதுதான் என்று விராட் கோலி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்ற பிறகு  சொந்த மண்ணில் அசைக்க முடியாத அளவுக்கு பலம் வாய்ந்த அணியாக இந்தியா மாறியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஒரு கேப்டனாக பந்து வீச்சு முறையை மாற்றும் விதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும்.

தவறு செய்துவிட்டோம்.. ஒட்டுமொத்த அணியாகவே தோல்வியடைந்தோம்... தோல்வி பற்றி ரோகித் சர்மா!

மேலும், பேட்ஸ்மனாக  விராட் கோலி புகுந்து விளையாடுவார். நடு வரிசையில் களமிறங்கும் விராட் கோலி அரணாக நின்று ரன்களை சேர்த்து கொடுப்பார்.  எந்த இன்னிங்ஸ் ஆக இருந்தாலும் சரி விராட் கோலி இருக்கிறார் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கும் எப்போதுமே காணப்படும்.

ஆனால், விராட் கோலி இல்லாதது தற்போது இந்திய அணியில் மிகப்பெரிய ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.

புஜாரா போன்ற அனுபவ வீரர்கள் இந்திய அணியில் இல்லாத நிலையில் கோலியின் விலகலும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp