கோலி பேச்சை கேட்க முடியாது.. ரோஹித் சர்மா அதிரடி... ஆஸி தொடருக்கு முன், திடீர் கருத்து வேறுபாடு!
நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ள இத்தொடருக்கான இந்திய அணி, நவம்பர் 10ஆம் தேதி, ஆஸ்திரேலியா புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்து, இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ள இத்தொடருக்கான இந்திய அணி, நவம்பர் 10ஆம் தேதி, ஆஸ்திரேலியா புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா சென்று வலைப்பயிற்சியில் ஈடுபடும் இந்திய அணி, நவம்பர் 15 முதல் 17ஆம் தேதி வரை, மூன்று நாட்கள், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடும் என முன்பு அறிவிக்கப்பட்ட போதும், அந்த போட்டி நடத்தப்படாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த இந்திய ஏ அணிக்கு எதிரான போட்டி குறித்து, பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, கேப்டன் ரோஹித், சர்மா, சீனியர்கள் வீரர்கள் விராட் கோலி, பும்ரா போன்றவர்களும் பங்கேற்றிருக்கிறார்.
அப்போது, இந்திய ஏ அணிக்கு எதிரான போட்டி நிச்சயம் தேவை என விராட் கோலி பேசியிருக்கிறார். எனினும், கேப்டன் ரோஹித் சர்மா, அதெல்லாம் தேவையில்லை. பவுன்ஸ் மற்றும் ஸ்விங்கிற்கு எதிராக கடுமையாக பயிற்சி செய்தாலே போதும். அந்த 3 நாட்களில், ஒருசில மணி நேரம் மட்டும் தான், விளையாட முடியும். இது நேரத்தை வீணடிகும் என கூறி இருக்கின்றார்.
அத்துடக், கேப்டனாக என்னை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். என்னுடைய முடிவுக்கு வீரர்கள் எதிர்கருத்து கூறாமல் இருந்தாலே போதும் என ரோஹித் சர்மா, சீனியர் வீரர்கள் மத்தியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்)
பும்ரா
யாஷஸ்வி ஜெய்ஷ்வால்
அபிமன்யு ஈஸ்ரவன்
ஷுப்மன் கில்
விராட் கோலி
கே.எல்.ராகுல்
ரிஷப் பந்த்
சர்பரஸ் கான்
துரூவ் ஜோரல்
அஸ்வின்
ஜடேஜா
முகமது சிராஜ்
ஆகாஷ் தீப்
பிரசித் கிருஷ்ணா
ஹர்ஷித் ராணா
நிதிஷ் ரெட்டி
வாஷிங்டன் சுந்தர்