இந்திய அணியின் துவக்க வீரராக மாறிய நட்சத்திர வீரர்.. ரோஹித் எடுத்துள்ள அதிரடி முடிவு!
2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறிய போது இந்திய அணியில் மாற்றங்களை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரர் ஜெய்ஸ்வாலை நீக்கி விட்டு விராட் கோலியை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், மாற்று துவக்க வீரராகக் கூட ஜெய்ஸ்வாலை அணியில் தேர்வு செய்யாமல், சுப்மன் கில்லை தேர்வு செய்ய உள்ளதாக வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறிய போது இந்திய அணியில் மாற்றங்களை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் பங்கேற்ற இந்த கலந்துரையாடலில், ஹர்திக் பாண்டியா குறித்து நீண்ட விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
அதை அடுத்து விராட் கோலியை டி20 அணியில் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி இந்திய டி20 அணியில் மூன்றாவது வரிசையில் தான் இறங்கி வந்தார். ஆனால், இந்த முறை அவரை துவக்க வீரராக, ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ரோஹித்தை நீக்கி இளம் வீரரை களமிறக்க ஹர்திக் திட்டம்.. பழிக்கு பழியா?
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் துவக்க வீரராகவே விராட் கோலி ஆடி வருகின்றார். இந்ாத நிலையில், விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்கினால் மற்றொரு துவக்க வீரரை அணியில் இருந்து நீக்க வேண்டும். அதனால், ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியின் துவக்க வீரர்களாக வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன்கள் ஜோடியாக இடம் பெற வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டது.
ஆனால், இப்போது அந்த திட்டத்தை தூக்கி வீசி விட்டு விராட் கோலிக்காக இடது கை துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.