இரண்டு பிரம்மாண்ட சாதனைகளை படைத்த ரோகித் சர்மா... கோலிக்கு அப்புறமா ஹிட்மேன்தான்!
டி20 போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்து, விராட் கோலியுடன் இணைந்து மைல்கல் சாதனையை ரோகித் சர்மா பதிவு செய்து உள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்ததை அடுத்து, தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்து அசத்தி இருக்கின்றார்.
அத்துடன், டி20 போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்து, விராட் கோலியுடன் இணைந்து மைல்கல் சாதனையை ரோகித் சர்மா பதிவு செய்து உள்ளார்.
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளதுடன், கீரான் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 258 சிக்ஸர்கள் அடித்த வீரராக இருந்த சாதனையை ரோகித் சர்மா தகர்த்து உள்ளார்.
டி20 போட்டிகளில் 12000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களை பார்த்தால், கிறிஸ் கெய்ல் - 14562 ரன்கள் (463 போட்டிகள்), அலெக்ஸ் ஹேல்ஸ் - 13610 ரன்கள் (494 போட்டிகள்), சோயிப் மாலிக் - 13571 ரன்கள் (557 போட்டிகள்), கீரான் போலார்டு - 13537 ரன்கள் (695 போட்டிகள்), விராட் கோலி - 13208 ரன்கள் (407 போட்டிகள்), டேவிட் வார்னர் - 13019 ரன்கள் (404 போட்டிகள்), ஜோஸ் பட்லர் - 12469 ரன்கள் (442 போட்டிகள்) ரோகித் சர்மா - 12058 ரன்கள் (456 போட்டிகள்) என்ற வரிசையில் உள்ளனர்.
மேலும் படிங்க | சிஎஸ்கேவால் பிளே ஆஃப் செல்ல முடியுமா? எந்த அணி வென்றால் நல்லது?
அத்துடன், டி20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில், 260 - ரோகித் ஷர்மா, 258 - கீரன் பொல்லார்ட், 127 - சூரியகுமார் யாதவ், 115 - ஹர்திக் பாண்டியா, 106 - இஷான் கிஷன் என்ற நிலையில் உள்ளனர்.
ரோகித் சர்மா 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து டி20 போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்த எட்டாவது வீரர் என்ற சாதனையை செய்ததுடன், இந்திய அளவில் இந்த சாதனையை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதற்கு முன் விராட் கோலி மட்டுமே இந்த மைல்கல்லை எட்டி இருந்த நிலைில், அவர், தற்போதுவரை 407 டி20 போட்டிகளில் 13,208 ரன்கள் எடுத்துள்ளதுடன், ரோகித் சர்மா 456 போட்டிகளில் 12,058 ரன்கள் எடுத்திருக்கிறார்.
மேலும் படிங்க | IPL 2025: சொந்த மண்ணில் அதிரடி... அரைசதம் விளாசி ரசிகர்களை மிரளவைத்த விராட் கோலி!