487 நாட்களுக்குப் பின்னர் சம்பவம்... விமர்சனங்களுக்கு சதம் விளாசிய பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!

ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் சதம் அடித்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் கம் பேக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

487 நாட்களுக்குப் பின்னர் சம்பவம்... விமர்சனங்களுக்கு சதம் விளாசிய பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!

ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் உள்ளிட்டவை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தத நிலையில் 487 நாட்களுக்குப் பின்னர் தனது சதத்தின் மூலமாக பல்வேறு  கொடுத்துள்ளார்

ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் சதம் அடித்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் கம் பேக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ரோஹித் சர்மா மீண்டும் அதிரடியாக ரன்கள் குவிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா கட்டாக்கில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணி 304 ரன்கள் எடுக்க 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிது. 

இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 76 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரியுடன் சதம் அடித்தார். முன்னதாக அவர் 2023 அக்டோபர் 11ஆம் தேதி நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார். 

இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

ரோகித் சர்மா ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடி அங்கே அவர் போதிய ரன்கள் குவிக்காத நிலையில் ரோகித் சர்மாவின் வயது, பேட்டிங் ஃபார்ம் உள்ளிட்டவை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனது சதத்தின் மூலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp