தொடக்க வீரராக களமிறங்கும் ரோஹித்... மூன்றாவது இடத்தில் ராகுல்.. சுப்மன் கில்லுக்கு ஆப்பு?  கம்பீர் அதிரடி?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மூன்றாவது வரிசையிலும் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடக்க வீரராக களமிறங்கும் ரோஹித்... மூன்றாவது இடத்தில் ராகுல்.. சுப்மன் கில்லுக்கு ஆப்பு?  கம்பீர் அதிரடி?

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மாற்றப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மூன்றாவது வரிசையிலும் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்கவுள்ளதுடன்,  மெல்போர்ன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணி வீரர்கள் ஃபார்முக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணியின் பேட்டிங் வரிசை தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

பேட்டிங் ஆர்டரை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று பொதுவாக கூறிய நிலையில், இதனால் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலேயே ஃபார்ம் அவுட் ஆன ரோஹித் சர்மா,  தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் அடிலெய்டு மற்றும் பிரிஸ்பேனில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் 4ஆவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவை களமிறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  கேஎல் ராகுல் நம்பர் 3இல் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி பேட்டிங் ஆர்டர் மாற்றப்படுமாக இருந்தால், சுப்மன் கில்லின் பேட்டிங் வரிசை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே செயல்பட்டு வந்துள்ள சுப்மன் கில்லை  ரிஷப் பண்ட்-க்கு பின் நம்பர் 6ல் களமிறக்க இந்திய அணி முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டியை நம்பர் 6 பேட்ஸ்மேனாகவே தொடரலாம் என்றும் இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் விளையாட முடிவு செய்துள்ளதால்,  சுப்மன் கில்லின் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. 

கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பதால், அவரை நீக்க முடியாமல் இந்திய அணி திண்டாடி வருகிற நிலையில், நிலையான பேட்டிங் ஆர்டரை உருவாக்க முடியாமல் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திண்டாடி  வருவதாக விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp