டி20 கேப்டனாகும் ஹர்திக் பாண்டியா? ரோஹித்தின் இந்திய அணி கேப்டன் பதவிக்கும் ஆப்பு!
இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதுடன், அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதுடன், அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஏனென்றால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்கக்கூடாது என முன்னாள் வீரர்கள் சிலர் கூறி வந்த நிலையில் ஹர்திக் பாண்டியா அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ரோஹித் சர்மா டி20 உலக கோப்பையின் முடிவில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுவதால், அப்படி நடந்தால் பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவை அடுத்த கேப்டனாக தேர்வு செய்துள்ளது.
அதன் காரணமாகவே 2024 ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படாத ஹர்திக் பாண்டியாவை உலகக் கோப்பைக்கான அணியில் சேர்த்து இருக்கிறது தேர்வு குழு.
எனினும், உண்மையிலேயே டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற விரும்புகிறாரா, அல்லது ஓய்வு பெறுமாறு ஹர்திக் பாண்டியாவால் அழுத்தக் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
ஏற்கனவே, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
இதனால், கடும் அதிருப்தியில் உள்ள ரோஹித் சர்மாவுக்கு தற்போது இந்திய அணியிலும் அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாக பார்க்க முடியும்.
இதேவேளை, ரோஹித் சர்மாவுக்கு 37 வயது ஆகிவிட்ட நிலையில் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.