திரும்பி வந்து முதல் போட்டியிலேயே இப்படியா? ரோகித் சர்மாவின் சேட்டை!
இருவருமே அதிரடி ஆட்டத்திற்கு பெயர் எடுத்தவர்கள் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கு முன்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா கூட்டணி களமிறங்கும் என்று கூறியிருந்தார்.
இருவருமே அதிரடி ஆட்டத்திற்கு பெயர் எடுத்தவர்கள் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக ஜெய்ஸ்வால் விலகியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன், அனுபவ வீரர் குல்தீப் யாதவ் மற்றும் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் இல்லை.
டாஸின் போது ரோகித் சர்மாவிடம் பிளேயிங் லெவனில் யார் தேர்வு செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா தரப்பில், சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான் என்று இரு பெயர்களை மட்டும் கூறிவிட்டு, மற்ற இருவரின் பெயர்களை மறந்து விட்டார்.
அப்போது முரளி கார்த்திக் குல்தீப் யாதவ் என்று குல்தீப் யாதவ் விளையாடவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரின் போது வீரர்களின் பெயர்களை கேப்டன்கள் மறப்பது வழக்கம். ஆனால் டி20 கிரிக்கெட் பக்கம் 14 மாதங்களுக்கு பின் திரும்பிய போது வீரர்களை மறந்தமை பேசப்பட்டு வருகின்றது.
அவர் சிந்தித்த போது மொஹாலி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்ப, இது ரோகித் சர்மாவின் சேட்டைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.