உண்மையை ஒப்புக்கொண்ட ரோகித் சர்மா... விரைவில் ஓய்வு முடிவு? என்ன சொன்னார் தெரியுமா?
37 வயதாகும் ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகள் மிச்சம் உள்ளன.
நியூசிலாந்து அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதன் ஊடாக இந்திய அணியானது, இதுவரையான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் முதல் தடவையாக முழுமையாக தொடரை இழந்துள்ளது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ரோகித் சர்மா ஓய்வு பெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகின்றார்.
37 வயதாகும் ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகள் மிச்சம் உள்ளன.
சொந்த மண்ணிலேயே ரோகித் சர்மா தடுமாறி வருவதால், அந்நிய மண்ணில் வெற்றி பெரும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா ஓய்வு முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, தான் இந்த தொடரில் சரிவர அணியை வழிநடத்த வில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டார்.
அத்துடன், இந்த தோல்வியை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் ஒரு அணியாக நாங்கள் தோற்று விட்டோம் என்றும் ரோகித் சர்மா கூறி உள்ளார்.
இதன் மூலம் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்து இருப்பதையே காட்டுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தோற்று இருப்பதால் பேசாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறும் முடிவுக்கு ரோகித் சர்மா தள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.