ரோகித் சர்மா செய்த தவறு.. மீண்டு வருமா இந்திய அணி?.. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்!
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் எடுத்த 101 ரன்கள் உடன் 245 ரன்கள் எடுத்தது.
இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் மோதி வரும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நடைபெற்று வருகிறது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் எடுத்த 101 ரன்கள் உடன் 245 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர், தனது முதல் இன்னிங்சை துவங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரம் துவக்க வீரராக வந்து 5 ரன்களில் வெளியேறினார்.பிறகு டீன் எல்கர் மற்றும் டோனி டி சோர்சி இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
சோர்சி 28, கீகன் பீட்டர்சன் 2, டேவிட் பெடிங்காம் 56, வெர்னன் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். டீன் எல்கர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல், சிறப்பான சதம் அடித்து 140 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்.
மார்க்கோ யான்சன் மூன்று ரன்களுடன் அவருடன் களத்தில் இருக்கிறார். தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்து, 12 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
15 பேர் அணியில் இல்லாத ரிங்கு சிங்.. பீல்டிங் செய்தது எப்படி?
இந்தியா தரப்பில் பும்ரா மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகள், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்த பொழுது, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சிராஜை வைத்து பந்துவீச்சை துவக்க வில்லை.
இது தென்னாபிரிக்கா அணிக்கு சாதகமாக அமைய, அவர்கள் அங்கிருந்து 50 ரன்கள் மேல் எளிமையாக எடுத்து விட்டார்கள். ரோகித் கேப்டன்சி தற்பொழுது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய போட்டியில் மேற்கொண்டு 40 முதல் 50 ரன்களுக்குள் தென்னாபிரிக்கா அணியை ஆல் அவுட் செய்து, இந்திய அணி பேட்டிங்கில் திரும்பி 300 ரன்கள் எடுக்கும் என்றால், இந்த போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் கடினம்தான்.