அதனை செய்யாவிட்டால் அவ்வளவு தான்... ரோகித்தின் இன்னொரு முகம் குறித்து பேசிய வீரர்கள்!

ரோகித் சர்மாவின் இன்னொரு முகம் குறித்து இந்திய அணி வீரர்கள் நிகழ்ச்சியொன்றில் பேசி உள்ளனர்.

அதனை செய்யாவிட்டால் அவ்வளவு தான்... ரோகித்தின் இன்னொரு முகம் குறித்து பேசிய வீரர்கள்!

ரோகித் சர்மாவின் இன்னொரு முகம் குறித்து  இந்திய அணி வீரர்கள் நிகழ்ச்சியொன்றில் பேசி உள்ளனர்.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவினாலும், டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாதித்தது.

இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சியாட் விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முகமது சமி பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அங்கு ரோகித் சர்மாவின் இன்னொரு முகத்தை பற்றி பேசிய  ஷமி, ரோகித் சர்மா முழு சுதந்திரத்தை அளிப்பார். ஆனால் அவருடைய எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்யவில்லை என்றால் அவ்வளவுதான்.

தொலைக்காட்சியில் ரோகித் சர்மாவின் ரியாக்ஷனை அடிக்கடி பார்க்கலாம். அதை பார்த்த உடனே நாங்கள் ரோகித் சர்மா மனதில் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய போராடுவோம் என்று ஷமி கூறி உள்ளார். 

இதைத் தொடர்ந்து பேசிய ஸ்ரேயாச், ரோகித் சர்மா முகத்திற்கு நேராக எதையும் திட்ட மாட்டார். நாங்களே அவர் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு விடுவோம்.- சில சமயம் அவர் என்ன பேசுகிறார் யாரைக் குறை சொல்கிறார் என்பதை அவருடைய நடவடிக்கை வைத்து புரிந்து கொள்வோம்.

அவருடன் பல ஆண்டுகள் விளையாடி உள்ளதால் எங்களுக்கு இது எளிதாகி விட்டது என்றார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp