ஜடேஜாவால் மூன்று வாய்ப்புகளை இழந்த இந்திய அணி... கடுப்பான ரோஹித் சர்மா... என்ன நடந்தது?
ராஞ்சியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுடன், 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.
இங்கிலாந்து அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் பாதியில் சிறப்பாக பந்து வீசியது. எனினும், இரண்டாவது பாதியில் பந்துவீச்சில் சொதப்பியது. அத்துடன், ரவீந்திர ஜடேஜாவால் மூன்று ரிவ்யூக்களையும் இழந்தது.
ராஞ்சியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுடன், 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.
எனினும், அதன்பின்னர் இங்கிலாந்து அணி சுதாரித்துடன், ஜோ ரூட் மற்றும் பென் ஃபோக்ஸ் நிதான ஆட்டம் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
தவறான முடிவெடுத்த இந்திய அணி... ஆரம்ப நாளிலேயே ஆப்பு வைத்த ஜோ ரூட்!
இவர்களது விக்கெட் வீழ்த்தியே ஆக வேண்டும் என்றே நெருக்கடியில்இந்திய அணி இருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா 60வது ஓவரை வீசினார் .
பென் ஃபோக்ஸ் அந்த ஓவரின் 3வது பந்தை தடுக்க முயன்ற போது அவர் காலில் பந்து பட்டது. இதை அடுத்து ஜடேஜா எல்பிடபுள்யூ அவுட் கேட்டார். ஆனால், அம்பயர் மறுத்து விட்டார்.
இதனால், கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ரிவ்யூ கேட்குமாறு வற்புறுத்த நேராக விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேலிடம் அவுட்டா என ரோஹித் சர்மா,கேட்டார். ஆனால், துருவ் பந்து லெக் திசையில் செல்வது போல இருப்பதாகவும், பந்து லெக் ஸ்டம்ப்பில் பட்டால் அவுட் இல்லை என்பதால் ஜுரேல் ரிவ்யூ கேட்க வேண்டாம் என கூறினார்.
ஆனால், ஜடேஜா தொடர்ந்து அடம் பிடிக்கவே வேறு வழியின்றி விக்கெட் வீழ்த்த வேண்டிய நெருக்கடியால் ரிவ்யூ கேட்டார் ரோஹித் சர்மா.
பந்து லெக் ஸ்டம்ப்பில் பட்டு இருந்தால் கூட அம்பயர் முடிவு என கூறப்பட்டு ரிவ்யூ வீணாகி இருக்காது. ஆனால், ஸ்டம்ப்பில் படாமல் போனதால் ரிவ்யூ வீணானது.
இந்த ரிவ்யூவுக்கு முன்னதாக மற்றொரு ரிவ்யூவை ஜடேஜா வீணாக்கி இருந்தார். இவ்வாறு இந்தியா தனக்கு இருந்த மூன்று ரிவ்யூக்களையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.