கோலியை போல் ரோகித் இல்லை... சாதனையை விட அணி தான் முக்கியம்.. கபில்தேவ் அதிரடி

 இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ், ரோகித் சர்மாவை பாராட்டி பேசி இருப்பது பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.

கோலியை போல் ரோகித் இல்லை... சாதனையை விட அணி தான் முக்கியம்.. கபில்தேவ் அதிரடி

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா, விராட் கோலியை போல ஆக்ரோஷமாக களத்தில் செயல்படுவதில்லை என்று விராட் கோலி ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

அதேசமயம் விராட் கோலி வேண்டுமென்று களத்தில் குதித்து கத்துவதாக ரோகித் சர்மா ரசிகர்கள் விமர்சிக்கின்றார்கள்.

இந்த நிலையில்  இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ், ரோகித் சர்மாவை பாராட்டி பேசி இருப்பது பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.

விராட் கோலியை போல் ரோகித் சர்மா குதிக்க மாட்டார். களத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். கேப்டனாக என்ன செய்ய முடியும் என்பதெல்லாம் ரோகித் சர்மாவுக்கு தெரியும். அந்த வரையறைக்குள் அவர் சிறப்பாகவே செயல்படுகிறார். 

பல பெரிய வீரர்கள் அணியை வழிநடத்தி இருக்கிறார்கள். சிலர் தன்னுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுகிறார்கள். ஆனால் ரோகித் சர்மா சுயநலம் இன்றி அணியை முன்னிறுத்தி விளையாடுகின்றார்.

விராட் கோலி 180 கிலோகிராம் எடையை தூக்குகிறார் என்றால் ரோகித் சர்மாவும் அதே செய்ய வேண்டும் என்பது இல்லை. ரோகித் சர்மாவுக்கு அவருடைய விளையாட்டு என்ன என்று நன்றாகவே தெரியும்

அத்துடன், பும்ரா தற்போது மிகச்சிறந்த பந்துவீச்சாளராக விளங்குகிறார். ஆயிரம் மடங்கு பும்ரா தான் மிகச் சிறந்தவராக திகழ்கிறார் என்று கபில் தேவ் பாராட்டி இருக்கிறார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...