தலைவலியா இருந்த அந்த விஷயம் இப்ப மாறிடுச்சு... மகிழ்ச்சியில் ருத்துராஜ்... என்ன நடந்தது?

கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக விளங்கி எம் எஸ் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றதுடன் இளம் வீரர் ருத்துராஜை கேப்டனாக நியமித்து விட்டு அவரது தலைமையில் தற்போது தொடர்ந்து ஆடி வருகிறார்.

தலைவலியா இருந்த அந்த விஷயம் இப்ப மாறிடுச்சு... மகிழ்ச்சியில் ருத்துராஜ்... என்ன நடந்தது?

கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக விளங்கி எம் எஸ் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றதுடன் இளம் வீரர் ருத்துராஜை கேப்டனாக நியமித்து விட்டு அவரது தலைமையில் தற்போது தொடர்ந்து ஆடி வருகிறார்.

இதனால் இந்த ஆண்டு அவரது ஓய்வுக்கான அறிவிப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் தான் இறுதிப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிஎஸ்கே கூட தோல்வியடைந்தது நல்லதுக்குதான்... வித்தியாசமான விளக்கம் கொடுத்த கில்..

தற்போது இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கேப்டன்சி மற்றும் பேட்டிங் என இரண்டிலும் ஜொலித்திருந்த ருத்துராஜ், 46 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். 

இந்த போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியால்  ரன் சேர்க்க முடியாமல் போக, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்களை மட்டும் தான் எடுக்க முடிந்தது. 

இதனையடுத்து, சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை தனது தலைமையில் பெற்றது பற்றி கேப்டன் ருத்துராஜ் பேசினார்.

இன்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்தும் சிறப்பாக அமைந்தது. அதுவும் குஜராத் போன்ற ஒரு அணிக்கு எதிராக இது போன்ற பெர்ஃபார்மன்ஸ் செய்வது பெரிய விஷயம். 

சென்னையை பொறுத்தவரையில் எப்படி பிட்ச் இருக்கும் என்பது தெரியாது என்பதால் பேட்டிங் மற்றும் பவுலிங் என எதை முதலில் செய்தாலும் நன்றாக செயல்பட வேண்டும் என முடிவு செய்திருந்தோம். கடைசி கட்டத்தில் விக்கெட் கையில் இருந்தால் இங்கே உதவும் என்பதும் எங்களுக்கு தெரியும். 

தனிப்பட்ட ரீதியில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக பேட்டிங் செய்து போட்டியை மாற்றி இருந்தார். அதே போல ஷிவம் துபேவின் தன்னம்பிக்கைக்கு அணி நிர்வாகம் மற்றும் தோனி ஆகியோர் தனிப்பட்ட ரீதியில் நிறைய உதவிகளை செய்திருந்தனர். இதனால் அவரின் நம்பிக்கையும் அதிகமாக இருந்தது

அவரது ரோல் என்னவென்று தெரிந்து சிறப்பாக ஆடி வரும் ஷிவம் துபே சிஎஸ்கே அணிக்கு பெரிய சாதகமாகவும் இருக்கிறார். இந்த போட்டியில் ஃபீல்டிங்கிலும் நிறைய முன்னேறிக் கொண்டுள்ள எங்கள் அணியில், கடந்த போட்டியை போல ரஹானே ஃபீல்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது என்றார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp