சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் ருதுராஜ்? உண்மை என்ன?

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட், அந்த அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என தெரிவிக்கப்படுகின்றது.

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் ருதுராஜ்? உண்மை என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்படுவார் என தகவல் பரவி வருகிறது. 

அதற்கு காரணம், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட், அந்த அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என தெரிவிக்கப்படுவதுதான்.

ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியில் இணைந்தால் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் எனவும், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. 

ருதுராஜ் கெய்க்வாட்டை விட அதிக அனுபவம் கொண்ட வீரர் ரிஷப் பண்ட், என்பதால் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த தகவல் உண்மையா என சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்த போது, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பே இல்லை எனவும் சிஎஸ்கே வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடக்க உள்ளதுடன், அப்போது ஒவ்வொரு அணியும் மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். 

ரிஷப் பண்ட் ஒருவேளை டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விலக நினைத்தால் மீண்டும் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படும். அவரை வாங்க ஏலத்தில் கடும் போட்டி நிலவும். 

அப்போது சிஎஸ்கே அணி மற்ற அணிகளுடன் கடும் போட்டி போட்டுத் தான் அவரை வாங்க வேண்டிய நிலை காணப்படும். 

பிசிசிஐயின் கோரிக்கையை புறக்கணித்த ஐசிசி: பாகிஸ்தானுக்கு செல்கிறது இந்தியா? 

ருதுராஜ் கெய்க்வாட் 2024 ஐபிஎல் தொடருக்கு இரண்டு ஆண்டுகள் முன்பிருந்தே கேப்டன் பதவிக்காக தயார் செய்யப்பட்டு இருக்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே, அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியின் கீழ் தோனியே ஆடும் போது, வேறு எந்த முக்கிய வீரர் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டாலும், அவர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் தான் ஆட வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...