வெற்றிபெற திணறிய தென்னாப்பிரிக்கா... ஆமை வேகத்தில் ஆடிய இலங்கை அணி படுதோல்வி!

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் "டி" பிரிவில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

வெற்றிபெற திணறிய தென்னாப்பிரிக்கா... ஆமை வேகத்தில் ஆடிய இலங்கை அணி படுதோல்வி!

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் "டி" பிரிவில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் போட்டி நடைபெற்ற பிட்ச் மிக மோசமாக இருந்ததுடன், இலங்கை அணி முதலில் பேட்டி தேர்வு செய்தது.

இதன்போது, தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் இலங்கை வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டுமே 100 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை தொட்டார். மற்ற எந்த வீரரும் நூறு ஸ்ட்ரைக் ரேட்டை ஒட்டி ரன் சேர்க்கவில்லை.

இந்த நிலையில், இலங்கை அணி 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்னாப்பிரிக்காவின் ரபாடா 2 விக்கெட்கள், பார்ட்மேன் 1, கேசவ் மகாராஜ் 2, அன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

இதன்பின்னர், 78 ரன்கள் என்ற மிகச் சிறிய இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் திணறினர். ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்களிலும், மார்கிரம் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டி காக் மற்றும் ஸ்டப்ஸ் மிக நிதானமாக ரன் சேர்த்தனர்.

டீ காக் 27 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டப்ஸ் டெஸ்ட் போட்டி போலவே ஆடி 28 பந்துகளில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த அதிரடி மன்னன் கிளாசனும் எதிர்பாராத விதமாக நிதானமாகவே ஆடினார். பின்னர் 16.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது தென்னாப்பிரிக்கா. 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வெற்றிக்கொண்டது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...