ஜடேஜாவுக்கு ஆப்பு... மிரள வைத்த தமிழக வீரரால் பரபரப்பு! அணியில் இடம் கிடைக்குமா?

தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் உள்ளூர் டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக செயற்பட்டு, இந்திய அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டியாக மாறி உள்ளார்.

ஜடேஜாவுக்கு ஆப்பு... மிரள வைத்த தமிழக வீரரால் பரபரப்பு! அணியில் இடம் கிடைக்குமா?

தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் கடந்த ரஞ்சி ட்ராபி தொடரில் 55 விக்கெட்களை வீழ்த்தியதுடன், தற்போது உள்ளூர் டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக செயற்பட்டு, இந்திய அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டியாக மாறி உள்ளார்.

புச்சி பாபு டெஸ்ட் தொடரில் டிஎன்சிஏ அணிக்காக ஆடி வரும் அவர், முதல் போட்டியிலேயே முதல் இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தி ஹரியானா அணியுடனான போட்டியை டிரா செய்ய உதவினார். 

இரண்டாவது இன்னிங்க்ஸில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதுடன், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய டெஸ்ட் அணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தியதுடன்,  13.2 ஓவர்களில் 36 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

இதனையடுத்து, நடைபெற்று வரும் புஜ்ஜி பாபு தொடரில் மூன்று இன்னிங்க்ஸ்களில் 14 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் சாய் கிஷோர்.

அண்மையில், தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயார் ஆகி விட்டதாகவும்,  டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுங்கள் என்றும், தான் விளையாட தயாராக உள்ளதாகவும் பேசி இருந்தார் சாய் கிஷோர்.

சாதனை வீரரரை தூக்கி எறிந்தது பிசிசிஐ... 31 வயதில் இந்திய பவுலர் அதிரடி ஓய்வு!

ஆனால், தற்போது புச்சி பாபு தொடரில் தனது பந்து வீச்சின் மூலம் தான் பேசியது சரிதான் என நிரூபித்து காட்டி இருக்கிறார் சாய் கிஷோர்.

இந்திய டெஸ்ட் அணியில் இடதுகை சுழற் பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளன நிலையில், இருவருக்குமே ஒரே நேரத்தில் அணியில் இடம் அளிக்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், சாய் கிஷோர் வெளிப்படையாக தனக்கு இந்திய அணியில் இடம் வேண்டும் என கேட்டதுடன் தற்போது பந்து வீச்சிலும் தன்னை நிரூபித்து வருகிறார். விரைவில் அவர் ஜடேஜாவுக்கு மாற்றாக இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளராக மாறுவாரா என்றும், அவருக்கு பிசிசிஐ வாய்ப்பு அளிக்குமா என்றும்  கேள்வி எழுப்பட்டுள்ளது.

27 வயதாகும் சாய் கிஷோருக்கு இப்போது டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் வயதான வீரர் என ஒதுக்கித் தள்ள வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp