இந்திய அணிக்கு இப்போ பழைய விராட் கோலி தான் வேணும்... விளாசிய முன்னாள் வீரர்
அந்த இரண்டு போட்டிகளில் வெறும் ஐந்து ரன்கள் தான் கோலி அடித்த நிலையில், மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடப்பு டி20 தொடரில் இந்திய அணியின் ஆரம்ப வீரராக களம் இறங்கி இருக்கும் விராட் கோலி இரண்டு போட்டிகளிலும் 10 ரன்களை கூட தாண்டாமல் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்.
அந்த இரண்டு போட்டிகளில் வெறும் ஐந்து ரன்கள் தான் கோலி அடித்த நிலையில், மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், விராட் கோலியிடம் ஒரு பிரச்சனை உள்ளதாகவும், அதுதான் தற்போது அவரது சரிவுக்கு காரணமாக உள்ளதாகவும் கூறி உள்ளார்.
ஸ்ட்ரைக் ரேட் குறித்த விமர்சனங்களுக்கு நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி பதிலடி கொடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150 ஐ தாண்டி சென்று விட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ஆடுகளம் மெதுவாக விளையாடினால் மட்டுமே ரன்கள் சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், பழைய விராட் கோலி தான் நல்ல தேர்வாக இருப்பார்.
எனவே விராட் கோலியிடம் சென்று நீங்கள் பழைய விராட் கோலி போல் முதலில் மெதுவாக ஆடி பிறகு அதிரடி காட்டுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், பும்ரா தான் சத்தமே இல்லாமல் தனி ஆளாக இந்தியாவுக்கு வெற்றியை பெற்று வருவதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தொடக்க வீரராக தான் களமிறங்குவார் என்று கூறப்படும் நிலையில், அதிக ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் உள்ளார் கோலி.